திருக்குறளை இயற்றியதனால் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது! அ.வேழமாலிகிதன்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - கரைச்சிப்பிரதேச சபை வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவியமை அதில் ஈழம் என்ற சொல் பொறிக்கப்பட்டமை தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவுப்பொலிஸார் கொழும்பில் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிளநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளரை இன்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தல்களுக்கு அமைய இன்றயை தினம் காலை பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைப்பிரிவில் முன்னிலையாகி அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிடுகையில்,

“கரைச்சிப்பிரதேச வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கு பிரதேச சபைக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்மந்தம், ஈழம் என்ற சொல்லை யார் எழுதியது. ஈழம் சொல் சட்டவிரோதமானது.

பிறமதங்களுக்கும் பிரதேச சபையில் இடங்கள் வழங்கமுடியுமா? என்ற பத்தொன்பது கேள்விகள் விசாரணைகளின் போது கேட்கப்பட்டதாகும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ஈழம் என்ற சொல் சட்டவிரோதமானதொன்றல்ல. இலங்கையில் தேசிய கீதத்திலும் இந்த சொல் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கின்றார்.

திருவள்ளுவர் உலகப்பொதுமறையாகிய திருக்குறளை இயற்றியதனால் அவ்சிலை வைக்கப்பட்டதாகவும் தான் தெரிவித்துள்ளதாகவும்” அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...