யாழில் இருந்து சென்ற அரச பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்! ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Report Print Kumar in சமூகம்

யாழில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்றுக் கொண்டிருந்த களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசாலைக்கு சொந்தமான பேருந்து சாரதிகள் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து இன்று களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் சாரதிகள் அதிகமாக வவுனியாவில் வைத்து தனியார் பேருந்து ஊழியர்களினால் அச்சுறுத்தலுக்குள்ளாகுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுப்பட்ட களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

தனியார் போக்குவரத்து ஊழியர்களினால் தாக்கப்படுவதை கண்டித்தும் தமக்கு பாதுகாப்பு கோரியும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் நேற்று தாக்குதலுக்குள்ளான களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

யாழில் இருந்து அக்கரைப்பற்றுக்கு வந்துகொண்டிருந்த களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்துசாலைக்கு சொந்தமான பேருந்து சாரதிகள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் தொடர்ச்சியாக தாங்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தி உரிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் களுவாஞ்சிகுடி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...