இலங்கை அதிகள் இருவர் பரிதாபமாக பலி!

Report Print Murali Murali in சமூகம்

பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 12 வயதான தர்‌ஷனா என்ற இலங்கை அகதி மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி பவானிசாகர் அரசு மேல்நிலை பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

இந்நிலையில், தர்ஷனா தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரின் கால் எதிர்பாராதவிதமாக குளிர்சாதன பெட்டியின் பின் பகுதியில் பட்டுள்ளது.

இதன் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தர்ஷனா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து பவானிசாகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

31 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பரமத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இதன்போது கார் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பரமத்தி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.