ஜனாதிபதியின் வருகைக்காக மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸார்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் நாளை காலை இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குச்சவெளி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

புடவைக்கட்டு பிரதேசத்திலுள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

எனினும், போராட்டத்தை நிறுத்துமாறு குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாக புடவைகட்டு பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும், குறித்த காலகட்டத்தில் எதுவித ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் விடுத்த கோரிக்கையை அடுத்து புடவை கட்டு மக்களால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயத்தில் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பாடசாலையின் 07 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான ஆசிரியர்கள் அனைவரையும் நியமித்து தருமாறு கோரியே இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களால் நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை போன்று மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...