இலங்கை மக்களுக்கு கவலை தரும் தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் தடை ஏற்படலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின்சாரத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது.

இதனால் அதிகளவான மின்சாரம், அனல் மின் உற்பத்தி நிலையங்களில் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை மேலும் தொடர்ந்தால், இடை விடாமல் மின்சாரம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலை நிலவும் தொடரும் பகுதிகளில் நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.