இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள் செய்த செயல்

Report Print Ashik in சமூகம்

ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோர கடல் வளங்களை பேணும் வாரம் இன்று மன்னார் கீரி கடற்கரை பகுதியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி திட்டமும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்தாஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட செயலக பணிமனை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் இணைந்து கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கீரி கடற்கரையோர பகுதிகளில் காணப்பட்ட சகல விதமான கழிவு பொருட்களும், மன்னார் நகரசபையின் கழிவுகள் அகற்றும் வாகனங்களில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.