உயிர் நீத்த முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபர்களுக்கு அஞ்சலி

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடமையாற்றி உயிர் நீத்த பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், குறித்த கல்லூரியில் கடமையாற்றி மறைந்த அதிபர்களின் உருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வித்தியானந்தா கல்லூரியின் முதல் அதிபர் யு.கு.மு.ஞானப்பிரகாசம் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி இறைபதமடைந்த நிலையில் இந்த நாளிலேயே வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்திருந்தனர்.