புதிய வரி விதிப்பு முறை தொடர்பான கருத்தரங்கு

Report Print Theesan in சமூகம்

வவுனியா வர்த்தகர்களின் நன்மை கருதி புதிய வரி விதிப்பு முறை தொடர்பான அறிவூட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில், வர்த்தக சங்கம், இலங்கை மத்திய வங்கி ஊடாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் சுஜன் சண்முகராஜா தலமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது

இக் கருத்தரங்கு முற்றுமுழுதாக தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டதுடன், வர்த்தகர்களும் பல்வேறு வினாக்களை வளவாளர்களிடம் தொடுத்துள்ளனர்.

இந்த கருத்தரங்கில் வளவாளர்களாக இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் பந்துள, உதவி ஆணையாளர்களான தயாகரன், சிவபாலன், இலங்கை மத்திய வங்கி முகாமையாளர் ஜெயரூபி, வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன், வவுனியா மாவட்ட கணக்காளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.