விறகு எடுக்க சென்ற நபருக்கு கரடியால் நேர்ந்த விபரீதம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் விறகு எடுக்க காட்டிற்கு சென்றவர் கரடி தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் காயமடைந்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கந்தளாய், கோவில் கிராமம் பகுதியை சேர்ந்த என்.ஆனந்தராசா (வயது 49) என்பவரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார்சைக்கிளில் கந்தளாய் சீனிஆலை காட்டுப் பகுதிக்கு தனிமையில் சென்று விறகுகளை வெட்டிக் கொண்டிருக்கும் போதே கரடி தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.