பலரின் இதயங்களை கனக்கச் செய்த சோகம்! கிராம மக்களின் மோசமான செயற்பாடு

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த ரயிலில் மோதுண்டு பல யானைகள் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும் இதன்போது மக்களின் செயற்பாடு மிகவும் மோசமாகவும் முகம் சுழிக்கும் வகையிலும் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை ஹபரண பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக இரு குட்டி யானைகள் உட்பட ஐந்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மட்டக்களப்புக்கான எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில், யானைகள் மீது மோதுண்டமையினால் தடம் புரண்டது.

இதன் காரணமாக ரயிலில் கொண்டு செல்லப்பட்ட எண்ணெய் தாங்கிகளில் இருந்து எரிபொருள் வெளியேறிக் கொண்டிருந்தன.

இதனை கண்ட பிரதேச மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முண்டியடித்துக் கொண்டு அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

இலங்கையின் மிகப்பெரும் சொத்தாக யானைகள் காணப்படுகின்றன. ஆசியாவில் மிகவும் அழகான யானைகள் இலங்கையில் மாத்திரமே உள்ளன.

இவ்வாறான நிலையில், விபத்து காரணமாக ஐந்து யானைகள் உயிரிழந்தமை நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.