திருகோணமலையில் கடையை உடைத்து பொருட்களை திருடிய நபர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, நான்காம் கட்டைப் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து பணம், மாவு வகைகள் மற்றும் டின் மீன்கள் போன்ற இதர பொருட்களை திருடி விற்பனை செய்ய முயன்ற நபரை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த கடையை உடைத்து 8800 ரூபாய் பணமும், 40000 ரூபாக்கு மேற்பட்ட மாவு வகைகள் மற்றும் 17000 ரூபாக்கு மேற்பட்ட டின் மீன் வகைகள், கடையிலுள்ள இதர பொருட்களையும் திருடி வீடுகளுக்கு சென்று விற்பனை செய்த நிலையில் சீனக்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை, சுமேதங்கரபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஹேரொயின் போதைப் பொருளுக்கு அடிமையான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மீது ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற வழக்குகள் நடைபெற்று வருவதோடு இவரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers