சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்குமாறு வாழ்க்கை செலவுகள் தொடர்பான குழு முன்வைத்த யோசனையை கவனத்தல் கொண்டு அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 325 ரூபாயில் அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள், வாழ்க்கை செலவுகள் தொடர்பான குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் 325 ரூபாயினால் அதிகரிக்க முடியாது எனவும் 190 ரூபாய் அதிகரிகக் குழு இணங்கியுள்ளது.