பேஸ்புக் காதல்! பெயர் தெரியாத நபருடன் சென்ற 17 வயது சிறுமி

Report Print Manju in சமூகம்

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் 17 வயது சிறுமியொருவர் பெயர் தெரியாத இளைஞருடன் சென்ற சம்பமொன்று தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி சலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபருடன் பேஸ்புக்மூலம் காதல் தொடர்பைப் பேணி வந்துள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் வீட்டைவிட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய், தனது மகள் காணாமல்போனதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் ஒரு இளைஞனுடன் வாழ்வதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து சாலிவெவ பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளின் போது 18 வயது பூர்த்தியடையாத காரணத்தினால் இன்னும் திருமணம் செய்யவில்லை எனவும் 18 வயதான பின் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுமி தம்புத்தேகம சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் ஒப்டைக்கப்பட்டார்.

பொறுப்பதிகாரியான இஷாரா ஹேரத் சிறுமியிடம் காதலனின் பெயரை விசாரித்தபோது தெரியாது என சிறுமி பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகள் தனக்கு வேண்டுமென தாய் கோரிக்கை விடுத்த நிலையில் குறித்த சிறுமி தனது காதலனுடன் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த இளைஞன் பெற்றோரை சார்ந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு பொறுப்பதிகாரியான இஷாரா ஹேரத் புத்திமதிகளை சொல்லியுள்ளார்.