தெய்வாதீனமாக உயிர் தப்பிய மாணவி! வெளியான அதிர்ச்சி காணொளி

Report Print Vethu Vethu in சமூகம்

ஹட்டன் - நுவரெலியா வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மாணவி ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

கொட்டகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி அதிக வேகத்தில் பயணித்த வாகனம் மாணவி மீது மோதியுள்ளது.

ஹட்டன் பிரதேசத்தின் தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 9ம் தர மாணவியொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து தொடர்பாக காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.