விரைவில் இயங்கவுள்ள கிளிநொச்சி அக்கராயன் வள நிலையம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - அக்கராயன் வள நிலையம் விரைவில் இயங்கவுள்ளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அக்கராயன் ஆசிரிய வள நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் தற்போது செயற்பட்டுவரும் ஆசிரிய வள நிலையச் செயற்பாடுகள் அக்கராயன் ஆசிரிய வள நிலையத்துக்கு மாற்றப்படவுள்ளது.

அத்துடன் தற்போது அக்கராயன் ஆசிரிய வள நிலையம் இயங்கிவரும் கட்டடம், மத்திய மகா வித்தியாலய நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் என்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன்குயின்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.