மாந்தைக் கிழக்கில் நாள்தோறும் 75 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகம்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாந்தைக் கிழக்கில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக நாள்தோறும் 75 ஆயிரம் லீற்றர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாந்தைக் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.

குடிநீர் விநியோகம் தொடர்பில் இன்று கேட்டபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மாந்தைக் கிழக்கில் 3060 வரையான குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் கடும் வறட்சி காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அடிநிலையைச் சென்றடைந்துள்ளதாகவும் இதனால் கிணறுகளை ஆழப்படுத்தித் தாருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.