கொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவளி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி!

Report Print Theesan in சமூகம்

கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன் முயற்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த சில நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறன.

இதனை அறிந்த மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் சிலர் இன்று அப் பிரதேசத்தில் புகுந்து வேலை செய்த மக்களை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து கரைதுறைப்பற்று தவிசாளர் க.தவராசா , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர் , கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலக காணிபகுதியினர் மற்றும் கமநல சேவை திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் அப் பிரதேச மக்கள் அனைவருமாக அணி திரண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.