கொழும்பில் ஓடும் பேருந்தில் அதிர்ச்சி கொடுக்கும் தமிழ் பெண்! பயணிகளுக்கு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜரத்னம் ராதா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த நபரிடம் 2000 ரூபாய் பணத்தை திருட முயற்சித்த போது அவர் பயணிகளிடம் சிக்கியுள்ளார்.

இதேவேளை மற்றுமொரு பயணியிடம் திருடிய 9500 ரூபா பணம் மற்றும் தொலைத்த பையையும் இந்த பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

குழந்தையுடன் பேருந்தில் ஏறினால் ஆசனம் பெற்றுக் கொள்ள முடியும். இதன்போது தனக்கு அருகில் உறங்கிய நிலையில் பயணிக்கும் நபர்களிடம் அந்தப் பெண் பையை திருடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான திருட்டு கும்பல்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.