வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் வெளி மாவட்ட பேருந்துகள் உட்செல்வதை தடை செய்ய வேண்டும், குறித்த பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெளி மாவட்ட பேருந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய வேண்டும் என்பவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வவுனியாவிலிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இன்று அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னைடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வவுனியா போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று தனியார் பேருந்து ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெளி மாவட்ட இ.போ.ச பேருந்துகள் அழைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும் அந்த பேருந்துகள் வவுனியாவிலிருந்து வெளி மாவட்டங்களுக்கே சேவையில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers