சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற பிரபல பாடசாலை மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Steephen Steephen in சமூகம்

காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த மாணவி, தனக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற பதுளை வைத்தியசாலைக்கு தாயாருடன் சென்றுள்ளார்.

இதன்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிவித்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மகப்பேற்று பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவி சில மணிநேரங்களில் குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான 21 வயது இளைஞனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.