கொழும்பில் முற்றுகையிடப்பட்ட ஆபாச விடுதிகள்! 12 அழகிகள் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 3 விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 12 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தின் பிரதான விகாரைக்கு அருகில் விபச்சார விடுதி நடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுதியின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக செல்வதனை போன்று சென்று குறித்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20 - 35 வயதிற்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் மொரட்டுவ, பொரலஸ்கமுவ, பதவிய, ஸ்ரீபுர, பஸ்ஸர, மடபாத்த, பிலியந்தலை, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.