யாழில் கத்தி முனையில் பல இலட்சம் ரூபாய் கொள்ளை

Report Print Sumi in சமூகம்

யாழ். சாவகச்சேரி, ஏ9 பிரதான வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 18 இலட்சத்துக்கும் அதிகமான தொகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 1,891,021 ரூபாய் பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று காலை வழமைபோல நிதி நிறுவனத்தை திறந்த பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துள்ளனர்.

இதன்போது கத்தியோடு உள்நுழைந்த திருடன் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.

இது குறித்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.