கொழும்பில் பேருந்து மீது கற் வீச்சு தாக்குதல் - நொடிப் பொழுதில் உயிர் தப்பிய நபர்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த பேருந்து மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.45 மணியளவில் அலுவலக போக்குவரத்து சேவை மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்துள்ளதுடன், அதில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

தாக்குதல் காரணமாக தான் நொடி பொழுதில் உயிர் தப்பியதாக காயமடைந்தவர் குறிப்பிட்டுள்ளார்.

குளியாப்பிட்டியில் இருந்து கொழும்புக்கு அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்வதால், தங்களுக்கு நட்டம் ஏற்படுவதாக சொகுசு பேருந்து உரிமையாளர்கள் இதற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தும்மலசூரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.