போதை தலைக்கேறியதால் திருமண வீட்டில் நபர் ஒருவர் செய்த செயல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் திருமண வீடொன்றில் அளவுக்கதிகமாக சாராயம் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றைய தினம் மாலையில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், மகமாயபுர, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருமண வீடொன்றுக்குச் சென்று அளவுக்கதிகமாக சாராயம் குடித்து விட்டு, போதை தலைக்கேறிய நிலையில் பழைய குரோதத்தை மனதில் வைத்து நபர் ஒருவரை தாக்கியதோடு கடுமையான ரகளையில் ஈடுபட்டு, தளபாடங்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக திருகோணமலை பொலிஸ் அவசர சேவைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு, அதற்கிணங்க கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers