ஒரு நீதியரசர் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி காற்றலை நிதி தொடர்பாக வடமாகாண சபையில் விவாதித்த வாதங்கள் தான் இன்று ஒரு நீதியரசர் குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலைக்கு கொண்டுவந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான பயிர்செய்கைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் நாங்கள் மாறவேண்டும்.

நீரை வினைத்திறனுடன் பயன்படுத்தி அதி உச்ச விளைச்சல்களை பெறக்கூடிய விவசாய முறைகள் தற்போதுள்ளன.

பல நாடுகள் இதன் மூலம் வெற்றி கண்டுள்ளன. இந்த காற்றலை மின்உற்பத்தி நிறுவனத்தின் நிதியின் கீழ் 47 பயனாளிகளுக்கு கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

காற்றலை நிதி தொடர்பில் மாகாண சபையில் விவாதித்த விவாதங்கள் தான் இன்று நீதிமன்றத்தில் ஒரு நீதியரசர் குற்றவாளிக் கூண்டில் நிற்கக்கூடிய துரதிஸ்டவசமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நிதி ஆரம்பத்தில் ஆளுநரால் பல விடயங்களுக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்றது

பின்னர் இந்த பணத்தினை திறைசேரி பெற்றுக்கொண்டதன் பின்னர் சங்கிலியன் பூங்காவைப் புனரமைக்க முயற்சித்த போது தான் இந்த பிரச்சனை ஆரம்பித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.