பால் பக்கெற் பற்றி நிறுவனத்தின் முகாமையாளரிடம் விசாரித்த நாமல் ராஜபக்ச

Report Print Steephen Steephen in சமூகம்

மக்கள் சக்தி ஆர்ப்பாட்டப் பேரணியின் போது விஷம் கலந்த பால் பக்கெற் வழங்கப்பட்டமை தொடர்பான உண்மை குறித்து மில்கோ நிறுவனத்தின் முகாமையாளரிடம் விசாரிக்க கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்ற தினத்தில் பக்கெற் பாலை அருந்திய சுமார் ஆயிரம் பேர் சுகவீனமடைந்தனர். இது சம்பந்தமாக நிறுவனம் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகாமையாளரிடம் கூறியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, டி.வி.சானக்க, தாரக பாலசூரிய, காஞ்சன விஜேசேகர, ஷெயான் சேமசிங்க உள்ளிட்டோர் மில்கோ முகாமையாளரை சந்தித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கெற்றுகளை பருகியவர்களுக்கு வயிற்றோட்டம் போன்ற வயிற்று கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.