நாலக டி சில்வாவுக்கு கட்டாய விடுமுறை

Report Print Steephen Steephen in சமூகம்

விசாரணைகள் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நாலக டி சில்வாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு அமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமான ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை ஒன்றை, குற்றப் புலனாய்வு திணைக்களம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.