மனைவி மற்றும் மாமியாரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

22 வயதான தனது மனைவியை இயற்கைக்கு மாறாக வல்லுறவுக்கு உட்படுத்தி, 37 வயதான மாமியாரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 37 வயதான நபரை கைதுசெய்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி கோணவல பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு சமமான வயதுடைய மாமியார், மருமகனுக்கு எதிராக நேற்று செய்த முறைப்பாட்டை அடுத்து, கோணவல பிரதேசத்தில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.