படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

Report Print Manju in சமூகம்

படுக்கை அறையில் தலையில் இரத்த வெள்ளத்துடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காணப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மதுரங்க, 92/1, திலிணகம, மீரிகம பிதேசத்தில் வசிக்கும் கே.பி கங்கா மதுபாஷினி (51 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ம் திகதி காலை 6.30 மணியளவில் உயிரிழந்த பெண்ணின் சகோதரி, குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து உறவினர்கள் குறித்த பெண்ணை மீரிகம வைத்தியசலைக்கு சொண்டு சென்றுள்ளனர். அங்கு அப்பெண் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் இரவு குறித்த பெண் 9.30 மணிக்கு நித்திரைக்குச் சென்றுள்ளார். அன்றைய தினம் இரவில், உயிரிழந்தவரின் தந்தை, அவரின் மகன், அவருடைய சகோதரி, மற்றும் உறவினர் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் இருந்த உறவினர் அங்கு நீண்ட காலமாக வாழ்ந்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

பொலிஸ் நாயைப் பயன்படுத்தி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, நாய் வீட்டிற்கு வெளியே செல்லவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்தவரின் உடல் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் மரணம் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers