இருவேறு இடங்களில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பொலிஸ் பிரிவுகளிலிருந்து இன்று ஆண்ணொருவரின் சடலத்தையும், பெண்ணொருவரின் சடலத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவத் தொழில் புரியும் பிரம்மச்சாரியான சதாசிவம் சிவரஞ்சன் (வயது 36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீட்கப்பட்ட சடலம் நாவற்குடா பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers