நீண்டகாலமாக கசிப்பு விற்பனை செய்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Theesan in சமூகம்

வவுனியா ஓமந்தை பாலமோட்டைப் பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை, நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பாலமோட்டை பகுதியில் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் தனது உடமையில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.