திருட்டு மற்றும் சண்டையில் ஈடுபட்ட சிறுவனுக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மற்றும் சண்டை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிறுவன் ஒருவரை யாழ். அச்சுவேலி சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.

பாலையூற்று, கூம்புகார், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த சிறுவனுக்கெதிராக திருட்டு வழக்குகள் மூன்றும், சண்டை வழக்குகள் இரண்டு இருந்த நிலையிலே மேலும் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் திருகோணமலை பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சிறுவனை ஆஜர்படுத்திய போதே யாழ்ப்பாணம் அச்சுவேலி சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Offers