கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்த இருபெரும் ஆபத்துக்களை தகர்த்த தீயணைப்புப் பிரிவினர்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இருந்த இரண்டு மிகப்பெரிய குளவிக்கூடுகள் நேற்றைய தினம் இரவு அழிக்கப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்புப் பிரிவினரால் குறித்த குளவிக்கூடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின், சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தின் அருகிலும், இரத்த வங்கிக்கு அருகிலும் இருந்த இரு குளவிக்கூடுகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் குறித்த குளவிக்கூடுகளின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக நோயாளர் நலன்புரி சங்கத்தினர் கரைச்சி பிரதேச சபையிடம் தெரிவித்ததன் அடிப்படையில் இந்தக் குளவிக்கூடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலையின் பணியாளர்கள் ஆகியோர் தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.