திருகோணமலையில் திடீரென்று பற்றி எரிந்த கடை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மத்திய வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி கடை ஒன்றில் தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.