யாழில் அடையாளம் தெரியாத நபர்களின் அட்டகாசம்! ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

Report Print Murali Murali in சமூகம்

யாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20ம் திகதி இலங்கை நேரம் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

‘கைதடி ஏ9 வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும், கூரிய ஆயுதங்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.