மோட்டார் சைக்கிளில் திடீரென்று தோன்றிய நாக பாம்பினால் பதற்றம்!

Report Print Nesan Nesan in சமூகம்

நாவிதன்வெளி - சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளின் முகப்பில் நாகப் பாம்பு தோன்றியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பாம்பினை கண்டு பதற்றமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

வீதியால் சென்றவர்களின் உதவியோடு மோட்டார் சைக்கிளை பிரித்து பாம்பினை கண்டுபிடித்தமையினால் பாம்புக்கடியிலிருந்து தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் சற்று நேரம் வீதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.