யாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு திருமணம்! மைத்திரி அரசில் சாதனை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் 100 ஜோடிகளுக்கு திருமணங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

திருமணம் செய்யாமல் நீண்ட காலமாக குடும்பம் நடத்திய ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 12 ஆயிரம் பிரச்சினைகளை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யாழில் பல பிரதேசங்களை சேர்ந்த மக்களின் 15418 பிரச்சினைகள் சமர்பிக்கப்பட்டதாகவும், அதில் 11830 பிரச்சினைகள் குறித்த பகுதிகளில் வைத்தே தீர்த்ததாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers