இலங்கையில் இப்படியொரு மாற்றமா? கொந்தளிக்கும் நாட்டு மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் சமகாலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருளான சீனியின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பல இடங்களில் ஒரு கோப்பை தேனீரின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.

ஒரு கோப்பை தேனீரின் விலை 30 ரூபாவுக்கும் ஒரு கோப்பை பால் தேனீரின் விலை 50 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை திட்டமிடப்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரித்தால் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான விலை அதிகரிப்பு காரணமாக உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்தும் பொருட்களின் விலைகளை அதிகரித்து வரும் சமகால அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.