யாழில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் நாட்டின் முக்கியஸ்தர்

Report Print Rakesh in சமூகம்

தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் நேற்று நல்லூரில் இடம்பெற்றது.

இதன்போது தமிழீழம் சார்ந்த ஓவியங்களை வரைந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் புகழேந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers