மூதூரில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சிறுவன்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் பகுதியில் ஒன்பது மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சிறுவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் போதைப்பொருளை வேறு ஒருவருக்கு வழங்க வைத்திருந்த நிலையில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவன் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் எனவும் தெரியவருகிறது.

சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கையாக அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.