சிங்களத்தில் ஜனாதிபதியிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ள தமிழ் பெண்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் மாத்தளையில் இராணுவத்தினரின் வீட்டில் வாடகைக்கு இருப்பதாக தெரிய வருகிறது.

இந்த விடயத்தை குறித்த பெண் கேப்பாப்புலவு நில மீட்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள நிலையில் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்த விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்,

எங்களுக்கு முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் 25 ஏக்கர் சொந்த காணி உள்ளது. அவை விடுவிக்கப்படாமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு கடிதங்கள் கொடுத்துள்ளோம்.

எனினும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாம் மாத்தளையில் இராணுவத்தினரது வீடொன்றில் வாடகைக்கு வசித்து வருகின்றோம்.

அந்த வீட்டிற்கான வாடகை ஐயாயிரம் ரூபா. எனவே எங்களுடைய சொந்த காணி எம்மிடம் கையளிக்கப்படுமாயின் நாம் அந்த இராணுவத்தினரின் வீட்டிலிருந்து எமது காணிக்கு வந்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தமிழ் குடும்ப பெண் தமது நிலத்தை மீட்டு தருமாறு கண்ணீர் மல்க ஜனாதிபதியிடம் சிங்களத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.