15 வருடங்களாக போராடிய பெண்ணின் நிலையை நேரில் கண்டு துடிதுடித்துப் போன மனிதம்

Report Print Dias Dias in சமூகம்

ஈழ விடுதலைப் போராட்டத்தில் 15 வருடங்களாக போராடிய முன்னாள் பெண் போராளி ஒருவரின் நிலையை ஐ.பீ.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி நேரில் சென்று ஆராய்ந்துள்ளது.

போர் முடிந்து பல வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி பல இன்னல்களுக்கு மத்தியில் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பெண்ணின் கதை அனைவரது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவைக்கின்றது.

புதுக்குடியிருப்பில் கடந்த 6 வருடங்களாக ஒரு ஓலைக் குடிசையில் வறுமையின் உச்சத்தில் இந்தப் பெண் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றார்.

ஐ.பீ.சி தமிழின் புதிய நிகழ்ச்சியான இந்த உறவுப்பாலம் ஈழத்தில் பல துன்பங்களை அனுபவிக்கும் மக்களின் வாழ்க்கையை வெளி உலகுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த பெண்ணின் ஏழ்மை வாழ்க்கையை இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக்கொண்டு வருகின்றது....

இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்: 0094212030600

Latest Offers