இரகசியத் தகவலையடுத்து சுற்றிவளைக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கினிகத்தேனை பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றி வளைத்த ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயகம ஹோகம எனும் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விரைந்த கலால் திணக்கள அதிகாரிகள் நேற்று நிலையத்தினை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவரிடமிருந்து இரண்டு இலட்சம் மில்லிலீற்றர் கோடா மற்றும் இரண்டு ஸ்பீரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 26ம் திகதி குறித்த சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியன நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Latest Offers