தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துமாறு கோரி ஹட்டனில் சுவரொட்டிகள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி ஹட்டனில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவாரத்தை முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பலமுறை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இதுவரை தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் எவ்வளவு என உறுதியாக தீர்மானிக்கப்படாத நிலையில் பல்வேறு தரப்பினர் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தினை உயர்த்துமாறு கோரி பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

கம்பனிகளுக்கு எதிராக அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில்எதிர்வரும் 23ம் திகதி தலவாக்கலையில் சம்பளத்தினை உயர்த்துமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இன்று அகில இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தினை 1281 ரூபாவால் உயர்த்துமாறு கோரி ஹட்டன் நகரில் இரு மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இது குறித்து அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று அரசாங்கத்தில் வேலை செய்கின்ற மற்றும் தனியார் துறையினருக்கும் அரசாங்கம் தலையிட்டு சம்பளத்தினை அதிகரித்துள்ளன.

தோட்டத்தொழிலாளர்களுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமையினால் மக்கள் இன்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இன்றுள்ள பொருளாதார நிலைக்கு ஏற்ப குறைந்தது 1281 ரூபா சம்பளமாவது வழங்குவதற்கு பொறுப்பு வாய்ந்தவர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வுக்கு அச்சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers