30 மில்லி கிராம் ஹெரோயினை வைத்திருந்தவருக்கு நேர்ந்த கதி

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை பகுதியில் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டார்.

திருகோணமலை, மகேசன்புர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹெரோயின் போதைப் பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்துள்ளதோடு, ஹெரோயின் வைத்திருப்பதாக திருகோணமலை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று குறித்த நபர் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers