கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகளை அகற்றுவதில் இழுபறி

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக கரைச்சி பிரதேச சபை சுட்டிக் காட்டியுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றும் குப்பைத்தொட்டியில் நோயாளிகளுக்கு மருந்து ஏற்றும் ஊசிகள் சிறிஞ் உடனும் தனியாகவும் போடப்பட்டுள்ளமையால் கழிவகற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் கடந்த 2018.09.12 , 2018.08.09 ஆகிய திகதிகளில் கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் அனுப்பப்பட்ட கடிதத்ததில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வைத்தியசாலையில் கழிவகற்றும் போது நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி குத்தி ஊழியர் ஒருவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இப் பிரச்சனை வைத்தியசாலை நிர்வாகத்தால் சீர் செய்யப்படாமையால் கிளிநொச்சி வைத்தியசாலை கழிவு அகற்றுதலில் தொடர்ந்தும் இழுபறிகள் நீடித்துள்ளது.

இந்தநிலைமை நீளுமாயின் கழிவகற்றும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் நோயாளிக்கு ஏற்றப்பட்ட ஊசி பிறிதொருவருக்கு குத்தினால் அவருடைய உடம்பில் இருக்கும் பாரிய நோய்கள் கூட ஒருவருக்கு தொற்றுவதற்கான சந்தர்ப்பம் இருப்பது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரிந்தும், இதனை சீர்செய்யாதிருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Latest Offers