போதைப்பொருளுக்கு எதிராக போராடிய தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை!

Report Print Murali Murali in சமூகம்

இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த தனபால் விஜேரத்னம் என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்பட்ட, இந்த கொலைக்கான காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயனப்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.