வறட்சி நிவாரணம் வழங்க 9000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

Report Print Aasim in சமூகம்

நாடு தழுவிய ரீதியில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 9000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வறண்ட கால நிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு இலட்சத்து இருபதாயிரம் மக்களுக்கு குடிநீர், உலர் உணவுகள் மற்றும் ஏனைய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முப்படையினரின் ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

மேற்குறித்த நிவாரண நடவடிக்கைகளுக்காக அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மாதாந்தம் 2000 மில்லியன் ரூபா ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.