பயணப் பொதியில் மறைத்து வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற பேருந்தில் கஞ்சா எடுத்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் பயணப்பொதியில் மறைத்து ஒன்றரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவை எடுத்து சென்றுள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers