தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை! மேலும் இருவர் கைது

Report Print Murali Murali in சமூகம்

போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த தனபால் விஜேரத்னம், மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி வந்த தனபால் விஜேரத்னம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயனப்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டிருந்தது.

இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்களை நடாத்திவந்த தனபால் விஜேரத்னம் நேற்று முன்தினம் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து பாமன்கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் அமைதியின்மை நிலவியிருந்தது. சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்திற்கு எதிராக செயற்பட்டமையே 37 வயதான தனபால் விஜேரத்னம் கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, இரத்தினபுரி - பாமன்கார்டன் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாமன்கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாமன்கார்டன் பகுதியில் இளைஞன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி குறித்த பகுதியில் இன்று காலை முதல் போராட்டங்கள் நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers